INTERNAL IMPROVEMENT RESULTS-APRIL 2024 |   REVALUATION - APRIL  |   APRIL 2024 PRIVATE STUDENTS RESULTS |   SEMESTER RESULTS APRIL 2024 |   SUPPLEMENATRY EXAMINATIONS & INTERNAL IMPROVEMENT TESTS JUNE 2024 |   PROSPECTUS 2024-2025 |   ADMISSIONS OPEN - 2024-2025 REGISTER NOW |   I YEAR SEMESTER SEATING - APRIL 2024 - REGULAR |   II YEAR SEMESTER SEATING - APRIL 2024 - REGULAR |   III YEAR SEMESTER SEATING - APRIL 2024 - REGULAR |   DOWNLOAD SEMESTER HALL TICKET 2024 |   ARREARS EXAM TIMETABLE APRIL 2024 |   REGULAR EXAM TIMETABLE APRIL 2024 |  

தமிழ் இலக்கியத் துறை / Department of Tamil Literature


“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு”

இளங்கலைத் தமிழ்த்துறை 2017 ஆம் ஆண்டில் 35 மாணவர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது. எமது துறையானது ஆற்றல்மிகு பேராசிரியர்களைக் கொண்டு இயங்கிவருகின்றது. ஆல்போல தழைத்து அருகுபோல வேரூன்றி படிப்படியாக மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து, தற்போது நூற்றிற்கும் மேற்பட்ட மாணவர்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

தமிழ்க்கற்பித்தலில் புதுமையை மேற்கொள்வதோடு போட்டித் தேர்வுக்குத் தயார் செய்வதும், பட்ட மேற்படிப்புக் கல்வி கற்பதற்கும் மாணவர்களை உருவாக்கி வருகிறோம். எங்கள் வழக்கமான கற்பித்தல் கற்றல் செயல்முறையோடு மாற்றுத் தளத்திலும் மற்றும் களப்பணியோடு கற்றல் கற்பித்தல் திட்டங்கள் வழியாகவும் மாணவர்கள் சமீபத்திய தகவல் தொழில்நுட்ப உதவியுடன் தமிழ் இலக்கியக் கற்றலில் இணைந்திருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம்.

தமிழரின் பாரம்பரிய அறிவைப்பெறுதல், பயன்பாட்டு நோக்கில் தமிழ்க்கற்றல், இதழியல், சுவடியியல், தகவல்தொடர்பியல், கணினித்தமிழ், இணையப்பயன்பாடு, கோயிற்கலை, ஊடகம் மற்றும் நாடகவியல் பயிற்சி, நாட்டார் வழக்காற்றியல் எனத் தமிழ்மொழியோடு தொடர்புடைய பிறதுறை அறிவுவளர்ச்சிக்குத் தேவையான அனைத்துத் தளங்களையும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

மாணவர்களின் தமிழ் இலக்கிய மன்றச் செயல்பாடு, சிந்தனைக் களச் சொற்பொழிவு, பேராசிரியர்களின் இலக்கிய வட்டச் சொற்பொழிவு, கருத்தரங்கம், கலை இலக்கியப் பயிற்சிப் பட்டறைகள், நாடகப்போட்டி, இலக்கியப்போட்டிகள், திறனறித்தேர்வுகள் எனப்பல நிகழ்வுகள் ஒவ்வொரு கல்வியாண்டிலும் நடத்திவருகிறோம். வெளிக் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகள் நடத்துவதன் வழியாக மாணவர்களுக்கு இடையே நல்லுறவை உருவாக்குகிறோம்.

வேலைவாய்ப்பு, சுயமுன்னேற்றம், கலைச்செயல்பாடு, படைப்பாக்கப் பயிற்சி இவை வழியாக மாணவர்கள் மேம்பட்ட அறிவுபெறும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தி, ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான அனைத்துத் தளங்களையும் மாணவர்களுக்கு வழங்கி வருகின்றோம். உயர்தனிச் செம்மொழியான தமிழ்மொழி வழி புதியோர் உலகம் செய்வோம்.

முனைவர் ஜெகதீஸ்வரி S

தமிழ் இலக்கியத் துறைத் தலைவர்