III-YEAR UG SEATING ARRANGEMENTS NOV-2025 |   II-YEAR UG/PG SEATING ARRANAGEMENTS NOV-2025 |   I-YEAR UG/PG SEATING ARRANGEMENTS NOV-2025 |   VIRTUAL WORKSHOP ON INTERDISCIPLINARY RESEARCH DESIGN: ZEBRAFISH CASE STUDY IN DRUG DISCOVERY |   NOVEMBER 2025 SEMESTER ARREAR SEATING HALL ARRANGEMENT FROM 25-10-2025 TO 11-11-2025 |   INVIGILATION SCHEDULE-SEMESTER EXAMINATION NOVEMBER- 2025 |   SEMESTER HALL TICKET NOVEMBER-2025 |   ARREAR EXAMINATION TIME TABLE - NOVEMBER 2025 |   SEMESTER EXAMINATION TIME TABLE NOVEMBER 2025 |   SEMESTER EXAMINATIONS FEE DETAILS-NOVEMBER 2025 |   SEED MONEY PROJECT PROPOSAL FORMAT (2025-26) |   EVEN SEMESTER INTERNAL IMPROVEMENT RESULT APRIL 2025 |   EVEN SEMESTER PRIVATE ARREAR RESULT APRIL 2025 |   PROSPECTUS 2024-2025 |  

Department of Tamil


அருள் ஆனந்தர் கல்லூரி 1970ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் தமிழ் மொழிப்பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. எமது தமிழ்த்துறை வரலாற்றுச் சிறப்புமிக்கத் தமிழ்மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, நல்லொழுக்கம் ஆகியவற்றைக் கற்பித்து, கல்லூரியின் முதுகெலும்பாக அமைந்துள்ளது.

மாணவர்களின் மொழித்திறனை இலக்கிய இலக்கண அறிவை வளர்க்கும் வகையில் முனைவர் பட்டம் முடித்த தகுதி வாய்ந்த சிறந்த பேராசிரியர்களால் பாடநூல்கள் தயாரித்து வழங்கப்படுகிறது.

காலமாற்றத்திற்கு ஏற்ப விளக்கக்காட்சி (Power Point) மொழி ஆய்வுக்கூடம் (language lap) போன்றbபுதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்களின் மொழித்திறன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

மாணவர்கள் கவிதை, கட்டுரை போன்ற படைப்பாற்றலை வளர்ப்பதற்கான பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.

சமகால சமூக, பொருளாதார, அரசியல் நிகழ்வுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் மாணவர்களைப் பார்வையாளராகவும் பங்கேற்பாளராகவும் சொற்பொழிவாளராகவும் கொண்ட புதன் விருந்து சொற்பொழிவு ஒவ்வொரு புதன்கிழமைதோறும் நிகழ்த்தப்பட்டு வருகிறது.

மாணவர்களின் நடிப்புத்திறனை வெளிக்கொணரும் வகையில் சிறந்த நாடக நடிகர், நாடக இயக்குநர் ஆகியோர் மூலம் நாடகப்பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ் இலக்கியத்தின் பன்முகப் போக்குகளை மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் சிறப்புச் சொற்பொழிவும் அறக்கட்டளைச் சொற்பொழிவும் நடத்தப்பட்டுவருகின்றன.

மாணவர்களும் ஆராய்ச்சி மாணவர்களும் பயன்பெறும் வகையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் ஓலைச்சுவடிகள் பழைய நூல்கள், இதழ்கள் ஆகியவற்றை சேகரித்து அவற்றின் முக்கியத்துவத்தைக் கற்பித்தும் ஆவணப்படுத்தியும் வருகிறது.

கிராமப்புற மாணவர்கள், இலக்கியம் மற்றும் இலக்கணம் கற்றலுடன் மொழித்திறனைக் கற்றவர்களாகவும், சிறந்த படைப்பாளர்காளாகவும் ஆய்வுச் சிந்தனையாளர்களாகவும் உருவாக்கும் நோக்குடன் 2018ஆம் ஆண்டு முதல் இளங்கலைத் தமிழ் (B.A.Tamil) பாடம் தொடங்கிக் கற்பிக்கப்பட்டு வருகிறது.


மாணவர்களின் மொழித் திறனை மேம்படுத்தியும் சமுதாய உணர்வினை ஊட்டியும் சமுதாய மாற்றத்திற்கான கருவிகளாக மாணவர்களை உருவாக்குதல்.


மாணவர்களின் மொழித்திறனை மேம்படுத்த ஏற்ற சூழலை உருவாக்கிப் பயிற்சியளித்தல்

இலக்கியங்களில் பொதிந்துள்ள அறநெறிக் கோட்பாடுகளையும் ஆளுமைப் பண்புகளையும் மதிப்பீடுகளையும் மாணவர்கள் அறிந்து பயன்பெற வகை செய்தல்

கலந்துரையாடல்கள் மற்றும் சொற்பொழிவுகள் வழியாக சமுதாய மாற்றத்திற்கான சிந்தனையை வளர்த்தலும் சமூக உணர்வைத் தூண்டுதலும்

பின்தங்கிய மாணவர்களை இனம் கண்டு வளர்ச்சிக்குத் தேவையான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து வழிகாட்டுதல்

மாணவர்களின் வேலை வாய்ப்பிற்கு ஏற்ற வகையில் புதிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்தல்